சென்னை: தமிழகத்தில் திருச்சி, தூத்துக்குடியின் கோவில்பட்டி, சேலத்தில் எடப்பாடி, கொடைக்கானல், கோவை, மதுரை, தேனி, வேலூர் என பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஆனால், சென்னையை மழை மேகங்கள் எட்டிக் கூட பார்க்கவில்லை. அதற்கு நேர் மாறாக கோடை வெப்பம் சென்னைவாசிகளை சுட்டெரித்து வருகிறது. சென்னைல எப்போ சார் மழை பெய்யும் என்ற கேள்வியை சிலர் வாய் விட்டும், சிலர் மனதுக்குள்ளும் கேட்டுக் கொள்கிறார்கள்.
இவர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்திருக்கும் பதிலில், சென்னையில் நேற்று ஒரு நல்ல தட்பவெப்பம் நிலவியது என்கிறார் பிரதீப் ஜான். இப்படி சொன்னால் 12 மணி வெயிலில் பொசுங்கிப் போனவர்கள் கோபப்படுவார்கள். ஆனால் உண்மையில் அவர் சொல்ல வந்தது என்னவென்றால், நேற்று நண்பகலில் 36 டிகிரி செல்சியஸை தொட்ட வெப்ப அளவானது, அப்படியே இருந்துவிடாமல், 2.30 மணிக்கெல்லாம் 33 டிகிரி செல்சியஸாகக் குறைந்துவிட்டது. இது ஒரு கனவு போன்றது என்கிறார்.
உண்மைதானே.. நேற்று மாலை 4 முதல் 5 மணிக்கெல்லாம் வெயில் தணிந்துபோயிருந்தது.
மேலும் அவர் கூறுகையில், நேற்று சென்னையில் பரவலாக 36-37 டிகிரி வெப்பம் பதிவானது. விமான நிலையம் பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இந்த வெப்ப அளவானது அடுத்த ஓரிரு நாட்களுக்கு குறையும் என்று எதிர்பார்க்கலாம் (கடற்கரையில் இருந்து வீசும் காற்றால்).
கேரளாவில் தென்மேற்கு பருவக் காலம் தொடங்கிவிட்டால், அப்போது தரைப்பகுதியில் இருந்து காற்று வீசும், அதனால், சென்னையில் வெப்ப அளவானது உச்சத்தைத் தொடும். நீங்கள் சென்னையின் தற்போதைய வெப்ப அளவை நினைத்துக் கவலைப்படுபவராக இருந்தால், நீங்கள் சென்னையை சேர்ந்தவர் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.
அதாவது, மே 20 முதல் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சென்னையில் உண்மையான கோடை வெப்பத்தைப் பார்க்கலாம். ராயலசீமாவில் இருந்து வறட்சியான மேகங்கள் கடும் வெப்பமான காற்றை சென்னைக்குக் கொண்டு வரும். ஒரு வேளை அந்த சமயத்தில் ராயலசீமாவில் மழை பெய்தால் நாம் அந்த கடும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்கலாம். அவ்வாறு இல்லாமல் போனால் இயற்கையாக, மே மாதத்தின் கடைசி 10 நாட்களில் கடுமையான வெப்பத்தை நாம் சந்தித்தே ஆக வேண்டும். இந்த காலக்கட்டத்தில் கோடை வெப்பத்தின் அனைத்து உச்சபட்ச அளவுகளும் வரலாறுகளாக மாறும்.
எனவே, சென்னை மழை பற்றி கேட்க வேண்டாம். தரைப்பகுதியில் உருவாகும் காற்று கடற்கரை நோக்கி நகரத் தொடங்கும். எனவே ஜூன் மாதத்தில் இருந்து (சென்னைக்கு அவ்வளவாக மழை கிடைக்காத மாதம்) சென்னையில் பருவ மழை தொடங்கலாம். சென்னையில் மழை பெய்யத் தொடங்கிவிட்டால், சென்னை மக்கள் அமைதியாக இருப்பார்கள். பிற பகுதி மக்கள் எங்கள் பகுதியில் எப்போது மழை பெய்யும் என்ற கேள்வியை ஆரம்பித்து விடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


