காவிரி நதிநீர் போராட்ட வெற்றி குறித்து வரும் 24}ஆம் தேதி முதல் டெல்டா மாவட்டங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்றுத் தருவதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் அதிமுக அரசு சட்டப் போராட்டம் நடத்தியது. இதன் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கும் தீர்ப்பை அதிமுக அரசு பெற்றுத் தந்துள்ளது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வரும் 24 முதல் 27}ஆம் தேதி வரையில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
வரும் 27}இல் திருவாரூரில் நடக்கும் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்கின்றனர். நாகப்பட்டினத்தில் வரும் 26}ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர் ஓ.எஸ்.மணியனும், வரும் 24}ல் கரூரில் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும், தஞ்சாவூரில் வரும் 25}இல் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், துரைக்கண்ணு எம்.பி., ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
அரியலூரில் வரும் 24}இல் நடக்கும் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு கொறடா ராஜேந்திரன், எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரும், புதுக்கோட்டையில் வரும் 25}இல் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரும், வரும் 26}இல் திருச்சியில் நடக்கும் கூட்டத்தில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் நடராஜன், வளர்மதி, எம்.பி.க்கள் பி.குமார், ரத்தினவேல் உள்ளிட்டோரும், கடலூரில் வரும் 27}இல் நடக்கும் கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுறவின் வெற்றி!

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!
தில்லி - என்சிஆா் பகுதியில் தாக்குதல், படுகொலைக்கு திட்டமிட்டதாக இரு ஐஎஸ்ஐ முகவா்கள் கைது

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

