
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தில்லி வீர் பூமியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.
இதே போன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ் காந்தியின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு, திருநாவுக்கரசு தலைமையில் ராஜீவ் காந்தியின் படத்துக்கு காலை 8 மணிக்கு மலர் தூவி, பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திலும் காங்கிரஸ் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.