மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் - திமுக போராட்டம் 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணி போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை கண்டித்து வரும் 25ம் தேதி திமுக போராட்டம் நடத்தவுள்ளது.

News image
Updated On :23 மே 2018, 6:51 am

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணி போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேற்று 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், வருகின்ற 25-ஆம் தேதி இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் திமுகவுடன் மற்ற தோழமை கட்சிகளும் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.