சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பாமக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பாமக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Updated On :25 மே 2018, 2:21 am IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பாமக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகும் கூட பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோபத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை மூடி மறைக்கும் முயற்சியில்தான் தமிழக அரசு ஈடுபடுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்தின்போது இருந்த அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்நிகழ்வு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். 
இதற்கெல்லாம் மேலாக துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை (மே 26) தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பாமக சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.