ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சனிக்கிழமை உறுதியளித்தார். இதுகுறித்து மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் அவர் தெரிவித்ததாவது:
ஸ்டெர்லைட் ஆலையை மூட அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக எடுக்கும். மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாததால் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஆலை இயங்கவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையே உற்பத்தி செய்யும் மின்சாரத்தையும் அவர்களாலேயே பயன்படுத்த முடியாது என்றார்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்தால்தான் எஞ்சிய 6 உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதிப்போம் என தூத்துக்குடியில் மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் தெரிவிப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் உறுதியளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!

ஜனநாயகன் படத்தை கேபிள் டிவி, இணையதளங்களில் வெளியிட இடைக்கால தடை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


