வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மெட்ரோ ரயிலில் 5 நாட்களில் 6.41 லட்சம் பேர் இலவச பயணம்

இதில் மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :30 மே 2018, 12:47 pm

சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., மற்றும் சின்ன மலை இடையே புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மே 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. 

பொதுமக்கள் இப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதை அறிந்து கொள்வதற்காக இந்த புதிய வழித்தடங்களில் இலவச பயணத்தை அறிமுகம் செய்தது. மே 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை இந்த இலவச பயணம் தொடர்ந்தது.

இதில் மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இலவச பயணம் தொடங்கிய மே 25-ஆம் தேதி 50 ஆயிரம் பேர், மே 26-ஆம் தேதி 20 ஆயிரத்து 500 பேர், மே 27-ஆம் தேதி அதிகபட்சமாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர், மே 28-ஆம் தேதி 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 பேர், கடைசி நாளான மே 29-ஆம் தேதி 1 லட்சத்து 73 ஆயிரத்து 986 பேர் பயணம் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.