சென்னை: சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியின் பொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடந்த போராட்டத்தில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடந்த பொழுது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ஐ.பி.எல்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரும் போராட்டம் நடந்தது. அப்பொழுது பணியில் இருந்த காவலர் ஒருவரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் கடுமையாகத் தாக்கினார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. போலீசார் தனிப்படை அமைத்து அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி மதன்குமாரை போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்ட மதன்குமார் எண்ணூரைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மீது நான்கு வழக்குகளை போலீசார் அப்பதிவு செய்திருந்தனர். அதில் ஒரு வழக்கில் அவர் முன் ஜாமீன் பெற்று உள்ளார். மீதமுள்ள 3 வழக்குகளில் அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


