தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ரஜினிகாந்த் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள் புகுந்துதான் கெடுத்திருக்கின்றனர். போலீஸாரைத் தாக்கியதும் ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதும் குடியிருப்புகளுக்கும் வாகனங்களுக்கும் தீ வைத்ததும் இந்த சமூக விரோதிகள்தான். இது எனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்கவேண்டாம். எனக்கு நன்கு தெரியும் அவ்வளவுதான். சமூக விரோதிகள் போலீஸாரை அடித்த பிறகுதான் பிரச்னை பெரிதாகியுள்ளது. காவல் துறை மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என மக்கள் இறங்கினால், தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என்றார்.
இந்நிலையில், விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம்
தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

குடும்ப அட்டைகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்: குமாரபாளையம் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


