மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இருபது தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் - ஓபிஎஸ் 3-ஆம் தேதி ஆலோசனை    

காலியாக உள்ள இருபது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர் 3-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :1 நவம்பர் 2018, 5:27 pm

சென்னை: காலியாக உள்ள இருபது சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர் 3-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்ட 18 சட்டப்பேரவைத் தொகுதிகள் உட்பட மொத்தம் 20 தொகுதிகளுக்கு முதல்வர் பழனிசாமி தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்திருந்தார். 

இந்நிலையில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிமுக பொறுப்பாளர்களுடன் முதல்வர் 3-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கூட்டமானது அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்ள உள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.