தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

இளைஞர்கள் முதலாளிகளாக மாறி வருகின்றனர்: தமிழிசை பெருமிதம்

பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

Updated On :6 நவம்பர் 2018, 1:29 am IST


பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: 
பாஜக ஆட்சியில் படித்த இளைஞர்களை முதலாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ரூ.1 கோடி வரை ஒரு மணி நேரத்தில் கடன் அளிக்கும் மிகப்பெரிய திட்டத்தை மோடி கொண்டு வந்துள்ளார்.
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக பாஜக கூறியது. அந்தப் பணம் எங்கே? என காங்கிரஸார் கேட்கின்றனர். அவர்கள் முதலில் ஒழுங்காகக் கணக்கு கொடுக்கவில்லை. பிரதமர் மோடி கூறியது போன்று, ராகுல் காந்தியோ, ப.சிதம்பரமோ, லாலுபிரசாத் யாதவோ மக்களைக் காப்பற்றுவதற்காக கூட்டணி அமைக்கவில்லை. தம் மக்களைக் காப்பதற்காகத்தான் கூட்டணி அமைத்துள்ளனர்.
ஏற்கெனவே பல நல்ல திட்டங்கள் அடிதட்டு மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பரிசாகக்கூட பல நல்ல திட்டங்களை மோடி அறிவிக்க உள்ளார். பாஜகவின் ஆட்சி சாதாரண மக்களுக்கானது. பெரிய முதலாளிகளுக்காக இந்த ஆட்சி நடைபெறவில்லை என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.