தமிழக அரசின் பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-இல் மாநில அரசின் பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பெற தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகள் 5 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உள்பட்டவராகவும், தமிழ்நாட்டில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
அத்துடன் பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு , பெண் குழந்தை திருமணங்களைத் தடுத்தல் மற்றும் சமூக அவலங்கள் அதனை தீர்வு காண்பதற்கு புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருத்தல், வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும். இவ்விருதுக்கு தகுதி பெறும் பெண் குழந்தைக்கு பாராட்டுப் பத்திரம், ரூ. 1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும்.
இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல் துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன்மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் நவம்பர் 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளம் சென்னை-1, 044 25264568 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி... வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணி!

வாக்களித்தால் மட்டும் போதுமா?
தமிழகத்தில் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


