தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர்: ஒளியின் பண்டிகையான தீபாவளி, சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் நன்னாளாகும். இந்தியாவின் அனைத்து மாநில மக்கள், இளைஞர்கள், முதியோர் என அனைவருமே தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுவர். இந்த இனிய நாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியையும் ஒளியையும் தீபாவளி கொண்டு வரட்டும். விளக்குகள் ஒளியைப் பாய்ச்சுவது போல பிறரின் வாழ்வையும் சுற்றுப்புறத்தையும் பிரகாசமாக்குவோம்.
முதல்வர்: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலத்துடன் கொண்டாடப்படும் இந்த இனிய வேளையில், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள். நரகாசுரன் எனும் கொடிய அரக்கனைத் திருமகள் துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
சுடர்விடும் தீபங்களின் ஒளிபோல மக்கள் மனமெல்லாம் இனிமை பொங்கும் திருநாளாகவும், உள்ளத்திலுள்ள இருள் விலகி புத்தொளி பிறக்கும் நன்னாளாகவும் தீபாவளி விளங்குகிறது. இந்த தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும், வளம் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ வேண்டும்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): தீபாவளித் திருநாள் உலகெங்கிலும் வாழும் மக்கள் பலராலும் ஜாதி, மத பேதமின்றி கொண்டாடப்படுகிறது. இதிகாச கால நரகாசுரன் அழிந்தாலும், இன்னும் பல நரகாசுரர்கள் மத்தியில் சிக்கி அல்லல் படும் மக்கள் விரைவில் மீண்டு மகிழ்வோடு வாழ, தீமையை ஒழித்து நன்மையை வளர்க்க நாம் அனைவரும் இந்நாளில் சபதம் ஏற்போம்.
விஜயகாந்த் (தேமுதிக): சாதாரண மக்களில் இருந்து, பெரும் பணக்காரர்கள் வரை தீபாவளி கொண்டாட ஆசைப்படுகின்றனர். விழாக்களும், பண்டிகைகளும் வருகிறது என்றாலே, ஏழை, நடுத்தர மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக யாரிடம் கடன் வாங்குவதென்று கவலை அடைகின்றனர். உணவுப் பண்டங்களின் விலை மட்டுமல்ல, ஆடைகள் மற்றும் பட்டாசுகள் என்று எதை வாங்கச் சென்றாலும் அவையெல்லாம் அதிகமான விலையிலேயே விற்கப்படுகின்றன. இதனால், பண்டிகைகளைக் கொண்டாட சிரமப்படும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் உள்ளனர்.
எனினும் இருப்பதைக் கொண்டு தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாக மக்கள் கொண்டாட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்திட மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டுமென்றும் தேமுதிக சார்பில் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜி.கே.வாசன் (த.மா.கா.): தீபம் எப்போதும் மேல் நோக்கியே சுடர்விடும். அது போல் தீபாவளித் திருநாள் நம் அனைவரின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் வழி வகுக்கும். புது விளக்கு ஏற்றி, புத்தாடை புனைந்து, பட்டாசு வெடித்து, பல்சுவை உணவு உண்டு மகிழ்வது போல் என்றும் எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி தொடர வேண்டும்.
ராமதாஸ் (பாமக): தீபாவளி ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் கொண்டாடப்படுவதாக இருக்கக் கூடாது. தமிழக மக்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தீப ஒளியால் நிறைந்து ஒளிமயமாகத் திகழ வேண்டும்.
அதற்கு அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற வேண்டும். அத்தகைய இலக்கை நோக்கி உழைக்க தமிழக மக்கள் அனைவரும் இந்த நன்னாளில் உறுதியேற்போம்.
அன்புமணி (பாமக): தீபாவளித் திருநாளின்போது மக்களிடையே நிலவும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; நாட்டில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பெருக வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): மக்களின் மனங்களில் அமைதியையும் அன்பையும் அளித்து, இந்தச் சமுதாயம் வளத்தையும் முன்னேற்றத்தையும் அடையும் சூழலை தீபாவளித் திருநாள் ஏற்படுத்தித் தரட்டும்.
கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): ஒளி-பிரகாசம்-வெளிச்சம் என்பதுடன் தொடர்புடைய தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவரின் வாழ்விலும் நன்மையும், உண்மையும், மென்மையும் உன்னத மனிதநேயமும் ஒளி சிந்திட வாழ்த்துகிறோம்.
இந்தியாவில் வாழும் அனைத்து மத, மொழி, இன, கலாசாரங்களை கொண்ட அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் வாழ வேண்டும்.
நிஜாமுதீன்(இந்திய தேசிய லீக்): பண்பாடு, கலாசாரம் காத்திடவும், நாடு நலம்பெறவும் நாட்டுமக்கள் வளம்பெறவும் நல்லிணக்கம் பேணவும், சகோதர, சமாதான சமுதாயம் காத்திடவும், ஏழ்மை போக்கிடவும் இத்தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



