சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி காலை 7-8 மணிக்கும், மாலை 6-7 மணிக்கும் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தென் மாநிலங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி நேரம் பொருந்தும்.
சரி இந்த சொற்ப நேரத்திலாவது நிம்மதியாக பட்டாசு வெடிக்க முடியுமா? முடியாது என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம். நவம்பர் 6ம் தேதி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழையும், 7 மற்றும் 8ம் தேதி தென் தமிகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, நவம்பர் 6ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்யும். மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இந்தியப் பெருங்கடலும், வங்கக் கடலும் இணையும் பகுதியில் இருந்து மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். கடற்பரப்பு மோசமானது முதல் மிக மோசமானதாக இருக்கும் என்பதால், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் கரை திரும்பவும், மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 7ம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நிலைதான் நவம்பர் 8ம் தேதியும் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தென் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தீபாவளி நாளில், அனுமதியளிக்கப்பட்ட நேரத்தில் கூட பட்டாசு வெடிக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எனினும், சென்னை உள்ளிட்ட வட தமிழக மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜாக்கிரதை, நான் பேசினாலே பிரச்னைதான்: நடிகர் ரஜினிகாந்த்

50 கத்திக்குத்து காயங்கள், 3 கொலைகள்! குடும்பத்தையே கொன்ற பெண்! அதிரும் காரணம்

தமிழ் உள்ளவரை கண்ணதாசனின் படைப்புகளும் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய் புகழாரம்

திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



