சென்னை: தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்துள்ளதால் மழையளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஅதிகாரி புதனன்று தெரிவித்துள்ளதாவது:
தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடலோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழை இருக்கக் கூடும்,
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரில் ஆங்காங்கே மிதமான மழை பெய்யக் கூடும்,
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.