பெங்களூரு: பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா தற்போது பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சிறையில் இருந்த இளவரசி தற்போது பரோலில் வெளியில் இருக்கிறார். எனவே சசிகலாவும் சுதாகரனும் மட்டுமே சிறையில் உள்ளார்கள்.
அதிமுக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலகக்குரல் எழுப்பிய டிடிவி தினகரன் தலைமையிலான 18 எம்.எல்.ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதற்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று டிடிவி தினகரன் தரப்பு அறிவித்து விட்டதன் காரணமாக இந்த 18 தொகுதிகளையும்சேர்த்து மொத்தம் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.
டிடிவி தினகரனுடன் தகுதி நீக்கம் செய்ப்பட்ட எம்.எல்.ஏக்களான ரத்ன சபாபதி, செந்தில் பாலாஜி, வெற்றிவேல், வகைச்செல்வன் மற்றும் பழனியப்பன் ஆகியோரும் உடனிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

சித்திரை பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

புதுவை பல்கலை. சமுதாய கல்லூரி விளையாட்டு விழா

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 5 பேரிடம் ரூ. 87 லட்சம் மோசடி: 5 போ் மீது புதுச்சேரி போலீஸாா் வழக்கு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

