கஜா புயல் எதிரொலி: பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் எதிரொலியால் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் எதிரொலி: பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read


கஜா புயல் எதிரொலியால் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் கஜா புயல் கடலூருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனுக்கும் இடையே இன்று வியாழக்கிழமை மாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். கடல் கடும் கொத்தளிப்புடன் காணப்படும். அலைகள் ஒரு மீட்டர் உயரத்துக்கு மேலெழும்பும். கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 410 கி.மீ. தொலைவிலும் நாகைக்கு வடகிழக்கே 480 கி.மீ. தொலைவிலும், மேற்கு தென்மேற்கு திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. 

இந்நிலையில், கஜா புயல் எதிரொலியாக தமிழக முழுவதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக எடுத்து வருகிறது. புயல் அபாயம் உள்ள நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் இன்று மூடப்படுவதாகவும், வனத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப்படும் படது சவாரிகளும் இன்றும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளுவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் உறுப்புக் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்துக்குள்பட்ட புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், அந்தமான் நிகோபார் கல்லூரிகளில் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூர் தேர்வுகள் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. திருவள்ளுர் பல்கலைக்கழகம் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுள்ளது.

எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com