டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அண்ணா பல்கலை. துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா? பாமக ராமதாஸ் கேள்வி

அரசு விடுமுறை அறிவித்தும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்த வைத்திருப்பதால், அண்ணா

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:42 pm

DIN


சென்னை: அரசு விடுமுறை அறிவித்தும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்த வைத்திருப்பதால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. தொடர் மழையை காரணமாக கடந்த வியாழக்கிழமை (நவ.22) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால். அன்று அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் கட்டாயப்படுத்தி தேர்வு நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

Story image

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டூவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: 
மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை அரசு விடுமுறை அறிவித்தும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்த வைத்திருக்கிறது. அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்? அரசு மழை விடுமுறை அறிவிக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களும் தங்களது தேர்வுகளை ஒத்திவைப்பது வழக்கம். சமீபத்தில் கூட அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஒத்திவைத்தது. அதேபோல நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் பந்த் நடத்தியபோது அதையொட்டி அந்த மாவட்டத்தில் மட்டும் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஒத்திவைத்தது என்பது நினைவிருக்கலாம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.