தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, திங்கள்கிழமை பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பார் போற்றும் புகழை உடைய பெரியகோயிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு மாமன்னர் ராஜராஜ சோழனின் 1033-வது சதய விழா அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான அக். 20-ம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த இருநாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்குச் சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன.
இதை முன்னிட்டு, பெரியகோயிலில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டு விமர்சனம்: இந்திய தலைமை நீதிபதி விளக்கம்!

யுபிஎஸ்சி: அரசியலமைப்பின் பகுதிகள் மற்றும் சட்டவிதிகள்!

கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம்
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
