காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு உடனே அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவிக்காதது கண்டனத்துக்குரியது. மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே, இந்த விவகாரத்தில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கர்நாடக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் கர்நாடக அரசு கட்டுப்பட்டு, 4 மாநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்கவும், நல்லுறவுக்கும் வழி வகுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்

அதிமுகவில் அணிமாறிய 3 எம்எல்ஏக்கள்? எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


