சென்னை, திருவல்லிக்கேணியில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி திங்கள்கிழமை இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை திருவல்லிக்கேணி துலுக்கானத்தம்மன் தோட்டப் பகுதியை சேர்ந்தவர் யூசுப் மகன் முகமது தாஜிதீன் (எ) அப்பாஸ் (38). இவர் திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல், முகமது தாஜிதீனை மறித்து, சரமாரியாக வெட்டினர்.
இந்த தாக்குதலில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். தகவலறிந்த ஐஸ்ஹவுஸ் போலீஸார் அங்கு விரைந்து, அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகமது தாஜிதீன் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முகமது தாஜிதீன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆவார்.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழில் போட்டி காரணமாகவா அல்லது வேறு காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டுள்ளரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

