கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய முகாம்: மனுக்கள் மீது விசாரணை

சென்னையில் முகாமிட்டுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட 35-க்கும் அதிகமான மனுக்கள் மீது

Updated On :22 அக்டோபர் 2018, 8:28 pm


சென்னையில் முகாமிட்டுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட 35-க்கும் அதிகமான மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். தமிழகம், புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் நலன் சார்ந்து தேசிய ஆணையத்துக்கு பல்வேறு மனுக்கள் அனுப்பப்படும். இந்த மனுக்கள் மீது அவ்வப்போது விசாரணை நடத்தப்படும்.
அதன்படி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் முகாமிட்டுள்ளார். அவர் திங்கள்கிழமை பிற்பகலில் பல்வேறு மனுதாரர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
தடகளத்தில் தடம்பதித்த திருநங்கை சாந்தி உள்ளிட்ட பலரும் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அவர்களது மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆணையத்தின் விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.