வீராணம் ஏரியின் நீர்மட்டம் திங்கள்கிழமை 44.45 அடியாக இருந்தது.
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து, ஆக. 26-ஆம் தேதி வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு 34 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் 102 கிராமங்களில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தொடர்ந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரியிலிருந்து விநாடிக்கு 74 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.
பாதுகாப்பு கருதி ஏரியின் நீர்மட்டம் 45 அடிக்கு மிகாமல் பொதுப் பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர். ஏரியின் உச்ச நீர்மட்டம் 47.5 அடி. இந்த ஆண்டு அக்.26-ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஏரியின் நீர்மட்டத்தை பொதுப் பணித் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தற்போது, கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக கீழணைக்கு விநாடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. கீழணையில் 8.50 அடிக்கு தண்ணீர் தேக்கியுள்ளனர். இதிலிருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. மேலும், ஏரிக்கு மழை நீரும் வருகிறது. ஏரியின் நீர்மட்டம் திங்கள்கிழமை 44.45 அடியாக இருந்தது. அதாவது, 752 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
ஏரியிலிருந்து சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 74 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. மழை காரணமாக ஏரி பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக மட்டும் விநாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நரசிம்ம ஜெயந்தி விழா

இளம்பெண் தற்கொலை

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

தொப்பூா் அருகே திடீரென லாரி நின்றதால் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்து
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


