தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பத்தினம்புதூரில் 5 பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

பத்தினம்புதூர்  பகுதியில் 5 அரசுப் பேருந்துகளை வழிமறித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :29 அக்டோபர் 2018, 6:04 am

மதன்



சூலூர்: பத்தினம்புதூர்  பகுதியில் 5 அரசுப் பேருந்துகளை வழிமறித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குறிப்பிட்ட நேரங்களுக்கு பேருந்துகள் வருவதில்லை, காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளர் கார்த்திகேயன், சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் தங்கராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் பலனாக சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இந்த பிரச்சினை மீண்டும் வராது என்று உறுதி அளிக்கப்பட்டதால் காலை 7 மணி முதல் 10 மணி வரை நடந்த சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.