கோபி: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு திருமணம் நிச்சயமான நிலையில் மணப்பெண் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உஜ்ஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு வயது 43. இவருக்கும், கோபி பகுதியைச் சேர்ந்த சந்தியா (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
செப்டம்பர் 12ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், குடும்பத்தினர் திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்குக் கொடுத்து வந்தனர். திருமண ஏற்பாடுகளும் நடந்து வந்த நிலையில், திடீரென சந்தியா வீட்டில் இருந்து மாயமானார்.
கடந்த 2 நாட்களாக அவரை உறவினர் வீடுகளில் தேடி வந்த சந்தியாவின் தாயார், கடத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அக்கா வீட்டுக்குப் போகிறேன் என்று கூறி சென்ற சந்தியா 2 நாட்களாக எங்குச் சென்றார் என்று தெரியாததால், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு புகாரில் கூறியுள்ளார்.
சந்தியாவுக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவருடன் சந்தியா சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்தும் தாயார் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா்: அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள் 7,832 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா்

மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பிரதமா் பேசுவது ஏற்புடையதல்ல: இரா.முத்தரசன்

நடமாடும் மருத்துவ கிளினிக் உள்பட தொழிலாளா்களுக்கான பல்வேறு நலத் திட்டங்கள்: முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

புழல் அருகே தீ விபத்து: ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


