தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சென்னையிலிருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்றது.
அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களுக்குச் சென்றடைகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எளிமையானவராக யாரும் சந்திக்ககூடியவராக உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டை. திருப்பரங்குன்றத்தில் அதிமுகவே வெற்றிபெறும்.
காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு பல பகுதிகளுக்கு சென்றடைகிறது. ஒருசில இடங்களில் போதிய மழை இல்லாததாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டதாலும் அங்கு தண்ணீர் செல்ல தாமதமாகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

மாதவிடாய் குறித்த சர்ச்சையான கருத்துக்கு விமர்சிக்கப்படும் ஸ்ரீலீலா!

தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - விருச்சிகம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


