மேட்டூர் உபரிநீரை சேலம் மாவட்ட நீர்நிலைகளுக்கு திருப்பி விட வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பேசியது: கர்நாடகம், கேரளத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணையின் கொள்ளளவு 93.47 டி.எம்.சி.யை எட்டியது. ஆனால், மேட்டூர் அணையிலிருந்து 170 டி.எம்.சி. உபரிநீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
மேட்டூர் அணை கட்டும்போது 11 லட்சம் ஹெக்டேராக இருந்த கர்நாடகத்தின் பாசனப் பரப்பு தற்போது 25 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தின் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு பாசனப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், நீர் மேலாண்மை திட்டத்தில் போதிய கவனம் செலுத்தாததால், தமிழகத்தின் பாசனப் பரப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. காமராஜர் ஆட்சியில் தமிழகத்தில் 9 அணைகள் கட்டப்பட்டன. ஆனால், அதன் பிறகு அணைகள் கட்டப்படவில்லை. மேட்டூர் அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்துக்கு அணையால் எந்தவித பலனும் இல்லை. எனவே, மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில், மேட்டூர் உபரிநீரை சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 976 நீர் நிலைகளுக்கு உபரி நீரை திருப்பிவிட வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பாசன வசதி பெற முடியும்.
மேட்டூர் அணைநீர் கடைமடை வரை சென்றடையவில்லை. இதையொட்டி டெல்டா பாசன மாவட்டங்களில் பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழத்தில் நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் உணவு, உற்பத்தி பெருகும். மேலும், மேட்டூர் நீரை தருமபுரி மாவட்டத்தில் தென்பெண்ணையாறு, பாலாறு நதிகளுடன் இணைக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

மாதவிடாய் குறித்த சர்ச்சையான கருத்துக்கு விமர்சிக்கப்படும் ஸ்ரீலீலா!

தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - விருச்சிகம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


