சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த தமிழிசை சௌந்தரராஜனிடம் பாஜகவை விமரிசித்து கருத்து தெரிவித்த பெண்ணை கைது செய்ததற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை விமானத்தில் பயணித்தார். அப்போது, அதே விமானத்தில் பயணம் செய்த சக பயணியான ஒரு பெண், தமிழிசையை நோக்கி பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக என்று விமரிசித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்மனியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ளதாவது,
"ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


