தமிழக பள்ளிளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது. தேர்வு முடிவின் அடிப்படையில் ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒரு பணியிடத்துக்கு 2 பேர் என்ற முறையில் 2,784 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்தவர்கள் எனத் தெரிய வந்தது.
இவற்றைக் கருத்தில் கொண்டு, 6 ஆண்டுகளாக நிரப்பப்படாத சிறப்பாசிரியர் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடனும், குளறுபடிகளுக்கு இடம் இல்லாத வகையிலும், தகுதி உள்ளவர்களை மட்டுமே கொண்டு நிரப்ப வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

