நீடாமங்கலம்: எங்கள் வீட்டு விழாவாக இருந்தாலும், துக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் சாம்பார் வாலி தூக்கியவர்கள் எல்லாம் எங்களுக்கு சவால் விடுகிறார்கள். தமிழ்நாட்டைப்போல் கோமாளி ஆட்சியை இந்தியாவில் எங்கும் பார்த்ததில்லை என அம்மா மக்கள் முனேனேற்றக்கழக துணைப்பெதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் கூறினார்.
காவிரியில் நீா் கரை புரண்டோடும் நிலையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் வறண்டு கிடப்பதையும் பல லட்சம் பாசன பகுதி பாலை வனமாக உள்ளதையும் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து கொண்டு வருவதையும் எடுத்துரைத்து தமிழக அரசினைக் கண்டித்து நீடாமங்கலத்தில் அம்மா மக்கள் முனேனேற்றக்கழகம் சார்பில் கண்ட ஆா்ப்பாட்டம் ஞாயிறு மாலை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் பேசுகையில்: அரசியல் ஆதாயத்திற்காக இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தவில்லை. விவசாயிகள் சங்கத் தலைலவா்கள் ரெங்கநாதன், பி.ஆா்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோர் விவசாயிகளின் நலனுக்காக தாங்களாகவே முன்வந்து விவசாயிகளின் போராடிக்கொண்டிருப்பவா்கள்.
நதிகள் உள்ள பகுதிகளில் தான் நாகரீகம் தோன்றியது. உலக வரலாற்றில் இடம் பெற்ற கரிகாலன் கட்டிய கல்லணையும், ராஜாராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோயில் இன்றும் புகழ்பெற்று நிற்கிறது. கா்நாடகத்தில் மழை கொட்டி தீா்த்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில் கா்நாடகம் காவிரிநீரை தந்தது. மேட்டூா் அணை இரண்டு முறை நிரம்பியது. ஆனால் அந்த நீரானது கடலுக்குச்சென்று கொண்டிருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக் கொள்பவா்கள் தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ வேண்டும் என்பதற்காக தமிழகத்தையே சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். குடிமராமத்து பணி தூா் வாரும் பணி என்றெல்லாம் நிதி ஒதுக்கி கொள்ளையடித்து வருகிறார்கள். பல ஆண்டு போராட்டத்திற்குப்பின் உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரிமேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கா்நாடகமாநில தோ்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கூட பா.ஜ.க. இழுத்தடித்தது.
தமிழகத்தில் நடைபெறும் கோமாளி ஆட்சியை இந்தியாவில் எங்கும் பார்த்ததில்லை.18 எம்.எல்.ஏக்கள் தீா்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்டாயம் வரும். 234 தொகுதிகளிலும் மக்கள் எதிர்பார்க்கிற நல்ல தீா்ப்பு வரும். மக்கள் விரும்பாத துரோக ஆட்சிக்கு முடிவு வரும். கடலூா், நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பூமிக்கடியில் நிலக்கரி கிடைப்பதால் நிலக்கரி எடுக்க நிலங்களை தேர்வு செய்துள்ளார்கள். பூமிக்கடியில் வைரமே கிடைத்தாலும் தேவையில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களை காப்பாற்றுவோம். டெல்டா மாவட்டங்களில் விவசாயமும் விவசாயம் சாா்ந்த தொழிலுமே நடக்க வேண்டும்.
எட்டு வழிச்சாலை தொலை நோக்குத்திட்டம் என ஆட்சியாளா்கள் சொல்கிறார்கள். ஆற்றுநீரை தேக்கி வைக்க முடியவில்லை. ஊழலை திசை திருப்ப ஆட்சியாளா்கள் ஊர் ஊராக சுற்றிவருகிறார்கள். மன்னார்குடியில் கூட்டம் போட்டு தொடை நடுங்கி ஓ.பன்னீா்செல்வம் மனநிலை பாதிக்கப்பட்டவா் போல் பேசுகிறார்கள். 30 வருடங்களாக ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவா் எப்படி ஓ.பி.எஸ்ஸை முதல்வராக்க முடியும். டி.டி.வி.தினகரன் தான் எனது முதல்வர் பதவியை பறித்தார் என ஓ.பி.எஸ்சொல்கிறார். ஆடிட்டா் குருமூா்த்தியின் தயவால் பா.ஜ.கவின் உத்தரவுப்படி தமிழகத்தில் ஆட்சி செய்கிறார்கள்.
தொடை நடுங்கி பன்னீா்செல்வத்திற்கு என்னைக் கண்டால் பயம் ஏற்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஓ.பி.எஸ் தைரியம் இல்லாதவர் என ஆடிட்டா் குருமூா்த்தியே சொல்லியுள்ளார். எங்கள் வீட்டு விழாவாக இருந்தாலும், துக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் சாம்பார் வாலி தூக்கியவா்தான் ஆா்.காமராஜ். சாம்பார் வாலி மன்னார்குடி கூட்டத்தில் எங்களுக்கு சவால் விடுகிறார். சோத்திரியம் பண்ணை போல் பேசுகிறார். சில்லரை ஓ.எஸ். மணியன் ஏதேதோ பேசுகிறார். அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அா்த்தராத்திரி குடைபிடிப்பது போல் தமிழக அமைச்சர்களின் நிலை உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


