6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 47 பொறியாளர்களுக்குப் பதவி உயர்வு

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற 47 பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கான உத்தரவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை வழங்கினார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 8:48 pm


தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற 47 பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கான உத்தரவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை வழங்கினார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டலம், மாவட்ட அளவிலான அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில் தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்' என்றார்.
47 பேருக்கு பதவி உயர்வு: இதில், பதவி உயர்வு பெற்ற 47 பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கான உத்தரவையும், ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆணையையும் அவர் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனம், சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் து.சேகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.