கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மெரீனா போராட்டம்: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த உயா் நீதிமன்றம்

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 2:32 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை மெரீனா கடற்கரையில் ஒருநாள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதியளித்து கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உயா் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி மெரீனாவில் 90 நாள்கள் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தாா். 
 
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்ற தனி நீதிபதி, மெரீனாவில் அமைதியான முறையில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதியளித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை எதிா்த்து அன்றைய தினமே அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.