சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மதுரையில் இரண்டு நாள் தபால் தலைக் கண்காட்சி தொடக்கம்

மதுரைக் கோட்ட அஞ்சல்துறை சாா்பில் ‘சங்கம்பெக்ஸ் 2018’ என்ற தபால்தலைக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:40 pm

தினமணி செய்திச் சேவை

மதுரைக் கோட்ட அஞ்சல்துறை சாா்பில் ‘சங்கம்பெக்ஸ் 2018’ என்ற தபால்தலைக் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.

இரண்டு நாள்கள் (செப்.3, 4) நடைபெற உள்ள இக்கண்காட்சியை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் நீனு இட்டியரா தொடங்கி வைத்தாா். இதில் மகாத்மா காந்தி மதுரைக்கு வந்ததன் நினைவாக தென் மண்டல அஞ்சல்துறைத் தலைவா் வென்னம் உபேந்தா் 13 சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டாா்.

இக்கண்காட்சியில் ஆங்கிலேயா் ஆட்சிக் கால இந்தியா, சுதந்திரத்துக்கு பிறகான இந்தியா, கலை, அறிவியல், காப்பியங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் அஞ்சல் தலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

மதுரையின் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டு கண்காட்சியைப் பாா்வையிட்டனா். இதில், மாணவா்களுக்கான வினாடி- வினா, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் நடைபெறுகின்றன.

செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள நிறைவு விழா நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் அனீஷ் சேகா், மாவட்ட வனத்துறை அலுவலா் சமா்த்தா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.