அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே: கமல் ஆவேசம் 

பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும்  குற்றமெனில் அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்   படவேண்டிய குற்றவாளிகளே என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே: கமல் ஆவேசம் 
Published on
Updated on
1 min read

சென்னை: பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும்  குற்றமெனில் அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்   படவேண்டிய குற்றவாளிகளே என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திங்களன்று சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வந்தார். விமானத்தில் தமிழிசை இருக்கைக்கு அருகில் தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த சாமி மகள் லூயிஸ் சோபியா (22) அமர்ந்து பயணித்துள்ளார். ஆராய்ச்சி மாணவியான லூயிஸ் சோபியா கனடாவிலிருந்து சென்னை வந்து அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.

விமானப் பயணத்தின்போது தமிழிசையை பார்த்ததும் ஆவேசமடைந்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டாராம். தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த பின்னரும் பாஜக குறித்தும், தமிழிசை குறித்தும் அவதூறாக பேசினாராம். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் அப்பெண்ணை அழைத்து நாகரிகமாக நடந்து கொள்ளும்படி தெரிவித்தபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலைய அதிகாரிகளிடமும், தனியார் விமான நிறுவனத்திடமும் புகார் தெரிவித்துவிட்டு திருநெல்வேலி புறப்பட்டுச் சென்றுவிட்டார். விமான நிலைய போலீஸார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் லூயிஸ் சோபியாவிடம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி அவர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். பின்னர் செவ்வாய் காலை  மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும்  குற்றமெனில் அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்   படவேண்டிய குற்றவாளிகளே என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது 

பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும்  குற்றமெனில் அத்தனை  அரசியல்வாதிகளும் கைது செய்யப்   படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில்  எடுக்கிறோம்.அரசியல்வாதிகள்  ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான்  என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com