தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கை நிரூபிப்போம்:  தங்க.தமிழ்ச்செல்வன்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கை நிரூபிப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக(அமமுக) கொள்கை பரப்புச் செயலர் தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று மக்கள் செல்வாக்கை நிரூபிப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக(அமமுக) கொள்கை பரப்புச் செயலர் தங்க.தமிழ்ச்செல்வன் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவருமான மூக்கையா தேவரின் நினைவு தினத்தையொட்டி, மதுரை அரசரடியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் தங்க. தமிழ்ச்செல்வன் கூறியது:
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக மக்கள் செல்வாக்கு எங்களிடம் இருப்பதை நிரூபித்தோம். அதன் தொடர்ச்சியாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத் தேர்தல்களிலும் அமமுக அமோக வெற்றி பெறும். இதை தெரிந்துதான் இடைத்தேர்தலை ஆளுங்கட்சி தாமதம் செய்து வருகிறது. 
சுதந்திரப் போராட்ட வீரர் மூக்கையா தேவர் நினைவுதினத்தையொட்டி தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை அத்தகைய நடைமுறை இருந்ததில்லை. ஆகவே, வரும் காலங்களில் புதிய நடைமுறையைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.