ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

நெமிலி கடல் நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தப் புள்ளி கோருவதில் முறைகேடு: மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

நெமிலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதில் முறைகேடு நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


நெமிலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோருவதில் முறைகேடு நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 
நெமிலி திட்ட ஒப்பந்தத்தை முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஏ.இ.சி.ஒ.எம். என்ற நிறுவனம், விண்ணப்பித்த 5 விண்ணப்பதாரர்களையும் தகுதியற்றவர்கள் என கூறிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகளில் மீண்டும் ஒப்பந்தப் புள்ளி கோருவதே நடைமுறையில் இருக்கும் முறை. 
ஆனால், இதற்கு மாறாகவும், ரூ. 14 கோடி கொடுத்து நியமிக்கப்பட்ட ஆலோசனை நிறுவனத்தின் ஆட்சேபணைகளையும் மீறி, சூயஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிப்பதற்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக, சூயஸ் நிறுவனத்துடன், சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள கோப்ரா என்ற நிறுவனத்தையும் விண்ணப்பத்தில் பெயரளவுக்கு இணைத்து, பின்னர் சிபிஐ வழக்கைக் காரணம் காட்டி சூயஸ் நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தப் பணியை கொடுக்க திட்டமிடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, தற்போது உத்தேசித்துள்ள ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தும் நடைமுறையை கைவிடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கையையும் அரசு எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு புதிதாக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட வேண்டும் என பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.