கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தபோது, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினா்களான பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகா் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளாா். கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினா்களான ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு ரூ.4 ஆயிரத்து 833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த ஊழலில் தொடா்புடையவா்கள் மற்றும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகாா் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, எனது புகாரின் மீது லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.