பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

பொங்கல் பண்டிகை: ரயில் பயண முன்பதிவு தொடக்கம் ஜனவரி 11 -க்கு சில மணி நேரங்களிலேயே முடிந்தது டிக்கெட்

வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை

Published On :

வரும் ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்கியது.
பொங்கலையொட்டி ஜனவரி 11-ஆம் தேதி பயணம் மேற்கொள்வதற்கு, பெரும்பாலான ரயில்களில் 2-ஆம் வகுப்பு தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளுக்கான முன்பதிவு வியாழக்கிழமை சில மணி நேரங்களில் நிறைவடைந்தது. அத்துடன் காத்திருப்போர் பட்டியலும் நீண்டது. பாண்டியன் விரைவு ரயிலில் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கை 380-ஆக உயர்ந்தது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகள், தொழில், கல்வி மற்றும் இதர காரணங்களுக்காக சென்னையை வாழ்விடமாகக் கொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வாடிக்கை. அத்துடன் பண்டிகை கால விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க விரும்பும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்வதற்கு பேருந்து வசதியைக் காட்டிலும் ரயில் சேவையை பயன்படுத்துவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பிட்ட நாள் ரயில் சேவையை பெருவதற்கு 120 நாள் முன்பிருந்தே முன்பதிவு செய்யும் திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்தி வருகிறது. பயணத் தேதியை திட்டமிட்டு மேற்கொள்ளும் பயணிகள் பெரும்பாலோர் இத்திட்டத்தைச் சரியாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை கால விடுமுறைகளில் பயணம் மேற்கொள்வதற்கு பயணிகள் பலரும் முன்கூட்டியே பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதால் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் அனைத்து இருக்கை முன்பதிவும் நிறைவடைவது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. 
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி 2019 ஜனவரி 11-ஆம் தேதி மேற்கொள்ளவிருக்கும் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்வதற்கு வருகை தந்தோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் முன்பதிவு விறுவிறுப்படைந்தது. அதே நேரத்தில் இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது.
காத்திருப்போர் பட்டியல்: வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி, பெரும்பாலான ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்து, காத்திருப்போர் பட்டியலில் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
3 அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருக்கைகள் காலியாக இருந்தன. சென்னை-மதுரைக்கு ஜனவரி 11-ஆம் தேதி புறப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் காத்திருப்போர் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்தது.
அதேபோல், சென்னை-திருநெல்வேலி செல்லும் நெல்லை விரைவு ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் காத்திருப்போர் எண்ணிக்கை 242 ஆகவும், சென்னை-செங்கோட்டை பொதிகை விரைவு ரயிலில் காத்திருபோர் எண்ணிக்கை 300 ஆகவும், கன்னியாகுமரி விரைவு ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 106 ஆகவும், சென்னை-திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 57 ஆகவும், சென்னை-தூத்துக்குடி முத்து நகர் விரைவு ரயிலில் காத்திருப்போர் எண்ணிக்கை 132 ஆகவும், நீலகிரி விரைவு ரயிலில் 106 ஆகவும், சென்னை-சேலம் விரைவு ரயிலில் 117 ஆகவும் காத்திருப்போர் எண்ணிக்கை இருந்தது. 
ஜனவரி 12 பயணத்துக்கு இன்று முன்பதிவு: ஜனவரி 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு வெள்ளிக்கிழமை (செப்.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 
ஜனவரி 13-ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமையும் (செப்.15), ஜனவரி 14-ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.16) காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.