சர்வதேச தற்காப்புக்கலை போட்டி: தங்கம் வென்ற மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்
கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச டேக்வான்-டோ தற்காப்புக் கலை போட்டியில் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.

பனாஜியில் நடைபெற்ற சர்வதேச டேக்வான் டோ தற்காப்புக் கலை போட்டியில் தங்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சென்னை மாநகராட்சி துணை ஆணையர்
கோவா மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச டேக்வான்-டோ தற்காப்புக் கலை போட்டியில் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
கோவா மாநிலம், பனாஜியில் சர்வதேச டேக்வான்-டோ தற்காப்புக் கலை போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வில்லிவாக்கம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 6-ஆம் வகுப்பு மாணவர்கள் சு.அனில்குமார், வினோத் ஆகியோர் பங்கேற்றனர். இதில், 25-30 கிலோ எடைப் பிரிவில் மாணவர்கள் சு.அனில்குமார், வினோத் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். இதன் மூலம் 2019-இல் நடைபெறவிருக்கும் ஆசிய அளவிலான டேக்வான்-டோ தற்காப்புக்கலை போட்டியில் கலந்து கொள்ள இம்மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஆர்.லலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





