செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

விதிமீறல்: புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மீது வழக்கு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று விதிகளை மீறி செயல்பட்டதாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி

Published On :


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று விதிகளை மீறி செயல்பட்டதாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி உள்பட அக்கட்சி நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவினை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். அதனடிப்படையில், பரமக்குடியில் செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, 67 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 
இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் விதிகளை மீறி ஒலிபெருக்கியில் பேசியதற்காக, அளிக்கப்பட்ட புகாரின்பேரில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி மற்றும் அக்கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலர் கதிரேசன், பரமக்குடி நகர் செயலர் புருஷோத்தமன், காட்டுப்பரமக்குடி ராஜீவ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல்,, பரமக்குடியைச் சேர்ந்த கலாநிதி, யேசுதுரை, வினோத், மணி மற்றும் சிலர் அனுமதியில்லாமல் விளம்பரப் பதாகை வைத்தது தொடர்பாகவும், அனுமதி இல்லாமல் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக பரமக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எல்.ஐ.சி. அலுவலக ஊழியர் ராஜ்குமார் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.