பி.சுசீலாவுடன் இணைந்து பாடகர் அவதாரம் எடுத்த அமைச்சர் ஜெயக்குமார்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ருசிகரம் 

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரபல பின்னணிப்  பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து, அமைச்சர் ஜெயக்குமார் பாடல்கள் பாடிய ருசிகர  சம்பம் நடந்துள்ளது.  
பி.சுசீலாவுடன் இணைந்து பாடகர் அவதாரம் எடுத்த அமைச்சர் ஜெயக்குமார்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ருசிகரம் 

சென்னை:  சென்னையில் தற்போது நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரபல பின்னணிப்  பாடகி பி.சுசீலாவுடன் இணைந்து, அமைச்சர் ஜெயக்குமார் பாடல்கள் பாடிய ருசிகர  சம்பம் நடந்துள்ளது.  

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது நினைவைப் போற்றும் வகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிலையில் ஞாயிறு மாலை 3.30 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்   எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன்விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இதற்காக, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், புகைப்பட கண்காட்சி, பல்வேறு துறைகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவுக்கு, சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் தலைமையேற்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பி.வளர்மதி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்,எம்பிக்கள், அதிமுகவினர், பொதுமக்கள் என லட்சக்கணக்கான வர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முன்னதாக அங்கு பிற்பகல் 2 மணி முதல் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான அமைச்சர் ஜெயக்குமாரும் முக்கியப்  பாடகராக பங்கேற்று எம்ஜிஆர் பாடல்களை பாடினார். 

‘அழகிய தமிழ் மகள் இவள்...’,  ‘புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தாங்க...’,  என்ற இரு பாடல்களையும் அமைச்சர் ஜெயக்குமார். முழுமையாக பாடினார். பாடி முடிந்த பின்னர் என்ன போதுமா எனவும் அவர் கேட்டார். 

அப்போது பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலாபி வுடன் இணைந்தும் அவர் பாடல்களை பாடினார்.  ‘ராஜாவின் பார்வை’, ‘பச்சை கிளி முத்துச்சரம்’  ஆகிய இரு பாடல்களைகளையும் சுசீலாவுடன் இணைந்து அவ பாடினார்.

இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் மூழ்கினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com