அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காலமானார் திமுக முன்னாள் அமைச்சர் செ. மாதவன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான செ. மாதவன் (85) உடல்நலக் குறைவு காரணமாக சிங்கம்புணரியில் உள்ள அவரது

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 8:03 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான செ. மாதவன் (85) உடல்நலக் குறைவு காரணமாக சிங்கம்புணரியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
சிங்கம்புணரி செல்லையாபிள்ளை மகன் செ.மாதவன். இவர் 1967-இல் அண்ணா அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், 1967 - 76 ஆம் ஆண்டுகளில் சட்டம், கூட்டுறவுத்துறை, தொழில் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மாதவன், 1982-ஆம் ஆண்டில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 1989-இல் ஜானகி அணி சார்பாக பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வியைத் தழுவினார். 1990-96-ஆம் ஆண்டுக்காலத்தில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மீண்டும் 1996-ஆம் ஆண்டில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
தற்போது திமுகவின் உயர்மட்டக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். 
கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவால், வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்த மாதவன் செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். இவருக்கு சாந்தி, செல்வி என்ற இரு மகள்களும், அருளானந்தம் என்ற மகனும் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.