ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் பலி 

திருப்பூர் அருகே சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது

News image
Updated On :14 ஏப்ரல் 2019, 11:24 am

DIN

திருப்பூர்: திருப்பூர் அருகே சாயப்பட்டறை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் அருகே உள்ள கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் சாயப்பட்டறை ஒன்று செயல்பட்டு வந்தது. ஞாயிறன்று அந்த சாயப்பட்டறையின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் நான்கு பேர்  திடீரென்று விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.