சென்னை: வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழன் காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
இந்நிலையில் வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் அதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று காலை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
திண்டிவனம் வாக்குச்சாவடியில் நான் வாக்களிக்கச் சென்ற போது வாக்கு எந்திரம் வைக்கப்பட்டிருந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை. வாக்களிக்க சிரமமாக இருந்தது. இன்னும் பல பகுதிகளில் இதேநிலை காணப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைய இன்னும் 6 மணி நேரம் உள்ளது. வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சம் கிடைக்க தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


