தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


புதுதில்லி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாடுமுழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் தமிழகத்தில் வேலூர் தவிர்த்த 38 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை கடந்த 18ந்தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ந்தேதி நடைபெறும்.
தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பரவலாக வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட காரியங்கள் நடைபெற்றதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்காநனது திங்களன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்டதால், இம்மனுவை பரிசீலிக்க முடியாது என்று கூறி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...