
சென்னை: காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை எழும்பூரைச் சேர்ந்த ரகுபதி என்ற காவலர் சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் தனக்கு வீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார்.
இந்த வழக்கானது வியாழன்று நீதிபதி சுப்ரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வாதத்தைக்கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:
தமிழகத்தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் சட்டவிரோதமாக குடியிருப்பது அதிகரித்துள்ளது.
அவ்வாறு சட்டவிரோதமாக குடியிருப்போரை அகற்ற டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு குடியிருப்பவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்.
அதற்கு சரியாக விளக்கம அளிக்காதவர்கள் 60 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்யுமாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அடுத்து வரும் இரண்டு வாரங்களில் ஆன்லைன் மூலம் உரியவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.