விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பா.ஜ.கவின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்: சிபிஎஸ்சி விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம் 

பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2019, 10:52 am

சென்னை: பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சிபிஎஸ்சி தேர்வுக் கட்டண உயர்வு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்சியில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் எஸ்.சி / எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாரகள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

CBSE தேர்வுக் கட்டணத்தை SC/ST மாணவர்களுக்கு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது! #NEET, #NEXT, #neweducationpolicy வழியில் தேர்வுக் கட்டணத்தை உயர்த்தி சமூகநீதியை நீக்கத் துடிக்கும் பா.ஜ.க அரசின் போக்கை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.