சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

திருப்பூரில்  விஜயகாந்த் தலைமையில் செப்., 15-ல் முப்பெரும் விழா: பிரேமலதா அறிவிப்பு  

திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15-இல் தேமுதிகவின் முப்பெரும் விழா நடைபெறும் என்று அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

Published On :

சென்னை: திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில் செப்டம்பர் 15-இல் தேமுதிகவின் முப்பெரும் விழா நடைபெறும் என்று அவரது மனைவியும், தேமுதிக மகளிர் அணித் தலைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக தலைவரான விஜயகாந்த் ஞாயிறன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்குழந்தைகள் விஜயகாந்திற்கு இனிப்பு ஊட்டி விட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் துணைப் பொது செயலாளர் சுதீஷ், 'ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று ஏதேனும் ஒரு மக்கள் நலத் திட்டம் தொடங்கப்பட்டு, அதனை தே.மு.தி.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது' என்று தெரிவித்தார்.

அதேபோல் விஜயகாந்த் பூரண உடல் நலமுடன் இருக்கிறார் என்றும், அவரது தலைமையில் திருப்பூரில் செப்டம்பர் 15-இல் தேமுதிகவின் முப்பெரும் விழா நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயாகாந்த் அறிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.