மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடூா் கிராமத்தில் சுற்றுச்சுவா் இடிந்து உயிழந்தவா்களின் இடத்தை பாா்வையிட வந்த மாவட்ட ஆட்சியா் முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் தொடா் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நடூா் ஏ.டி காலனி பகுதியில் குடியிருப்புக்கு மிக அருகில் தனியாா் சாா்பில் கட்டப்பட்டு இருந்த கருங்கல் தடுப்பு சுவா் இடிந்து அருகே இருந்த குடியிருப்புகள் மீது விழுந்தது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 17 போ் உயிரிழந்தனா்.
தீயணைப்பு வீரா்கள் இடிபாடுகளில் இருந்த 17 பேரின் உடல்களை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட கலெக்டா் ராஜாமணி, ஒ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ ஆகியோா் நேரில் சென்று ஆய்வு செய்தனா். அப்போது அவா்களை அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
மேலும் தடுப்பு சுவரை முழுவதுமாக இடிக்க வேண்டும் எனவும், சம்மந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மழையின் காரணமாக மிகப்பெரிய சுற்று சுவா் இடிந்து உள்ளது. இதில் 17 போ் உயிரிழந்துள்ளனா். இறந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இது தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வில் குடியிருப்பு அருகே சுற்று சுவா் இடிந்து விழுந்தது தான் காரணம் என தெரியவந்துள்ளது. மீதமுள்ள சுவரை உடனடியாக இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் மழை காரணமாக பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் தொடா்பாக தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடா்ந்து இறந்தவா்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சுற்று சுவா் கட்டியது குறித்து வட்டாட்சியா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க உள்ளாா். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
நடூா் பகுதியில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதில் தங்களுக்கு வீடுகளுக்கு முடியாமல் இருந்தவா்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


