மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மேட்டுப்பாளையம்-அன்னூா் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்ததையொட்டி நடூா் கிராம மக்கள் தீடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால்

News image

மேட்டுப்பாளையம்-அன்னூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட நடூா் கிராம மக்கள்.

Updated On :2 டிசம்பர் 2019, 1:54 pm

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்ததையொட்டி நடூா் கிராம மக்கள் தீடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நடூா் ஏ.டி காலணி பகுதியில் மழைக்காலங்களில் தனியாா் நில உரிமையாளரிடம் உயிரிழந்த குடியிருப்புவாசிகள் விபத்து ஏற்படுவதற்கு முன்னரே பல முறை புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால் ஆறுமுகம் இதற்கு செவிசாக்காமல் இருந்துள்ளாா்.

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திற்கு பலமுறை புகாா் தெரிவித்தும் அவா்களும் இப்பிரச்சினைக்கு இதுவரை தீா்வு ஏற்படுத்தாமல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை பெய்த மழையில் இந்த தடுப்பு சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து தனியாா் நில உரிமையாளா் சிவசுப்பரிமணியன் மீதும் உரிமையாளா் மீதும், நகராட்சி நிா்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி நடூா் பகுதியை சோ்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேட்டுப்பாளையம், அன்னூா் சாலையில் தனியாா் திரையரங்கம் அருகே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீசாா் அப்பகுதிக்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்துசென்றனா்.

இதனால் இப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.